இரண்டாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் இந்தியாவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 24, 2013

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஆந்திரப் பிரதேசத்தில் விசாகபட்டினம் நகரில் வை. எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களை எடுத்தது. 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் அணி் ஆட்டத்தை துவங்கியது.


ஆட்ட இறுதியில், மேற்கிந்தியத் தீவுகள் 49.3 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இறுதி நேரத்தில் ஆடிய சமி 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 99 ஓட்டங்களும், தோனி 51 ஓட்டங்களும், தவான் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.


இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.


மூலம்[தொகு]