இலங்கையில் இரண்டு விமானப்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கின

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 1, 2011

இலங்கையின் விமானப்படையின் 60ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்காக ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கம்பகா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளன. ஒரு விமானி உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.


விமானங்கள் இரண்டும் மோதுவதற்கு சற்று முன்னதாக விமானிகள் இருவரும் தத்தமது விமானங்களில் இருந்து வெளித்தள்ளும் கருவியைப் பயன்படுத்தி வெளியேறியுள்ளனர். எனினும் ஒருவர் மட்டுமே உயிர்தப்பியுள்ளார். அவரும் கடும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக விமானப்படை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த விமானி லெப்டினன்ட் தரத்தைச் சேர்ந்த மொனாசு பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்தநிலையில் விபத்தின் போது தரையில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். கிபீர் விமானங்களில் ஒன்று வீதி ஒன்றில் உடைந்து வீழ்ந்துள்ளது. மற்றையது வீடு ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது.


மூலம்[தொகு]