ஈராக்கில் 'கெமிக்கல் அலி' தூக்கிலிடப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 26, 2010



ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் வலதுகரமாக விளங்கிய 'கெமிக்கல் அலி' என அழைக்கப்பட்ட அலி அசன் அல் மஜீத்துக்கு திங்கட்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


கெமிக்கல் அலி

சதாம் உசேனின் நெருங்கிய உறவினரான 68 வயது அல்-மஜீத் நேற்று தூக்கிலப்பட்டதாக இராக்கிய அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


2010, ஜனவரி 17 இல் இவருக்கு அளிக்கப்பட்ட நான்காவது மரண தண்டனை, 1988ம் ஆண்டில் வடக்கு ஈராக்கில் ஹலாப்ஜா என்ற கிராமத்தில் குர்திய இன மக்கள் மீது நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைக்கு உத்தரவிட்ட குற்றம் தொடர்பில் அளிக்கப்பட்டது.


ஐயாயிரம் பேர் வரையில், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் இந்த படுகொலையின் போது கொல்லப்பட்டனர்.

மூலம்