ஈராக்கில் எண்ணெய் வயல்கள் ஏலம்
விக்கிசெய்தி இருந்து
வெள்ளி, டிசம்பர் 11, 2009
ஈராக்கில் இருந்து ஏனைய செய்திகள்
- 8 மே 2013: போர் நிறுத்தத்தை அடுத்து குர்தியப் போராளிகள் துருக்கியில் இருந்து ஈராக் நோக்கி நகர்வு
- 29 செப்டம்பர் 2012: தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து ஈரானிய முஜாகதீன் அமைப்பை அமெரிக்கா நீக்கியது
- 24 ஜூலை 2012: ஈராக் தலைநகரத் தாக்குதல்களில் குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டனர்
- 3 ஜூன் 2012: 2012 வீவா கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கேற்கிறது
- 24 பெப்ரவரி 2012: ஈராக்கில் இடம் பெற்ற தொடர் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஈராக்கின் அமைவிடம்
இராக்கில் இதுவரை பெற்றோலியம் எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படாத எண்ணெய் வயல்கள் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
பெரிய விலைக்கு ஏலத்தில் விடப்பட்ட தெற்கு இராக்கின் மஜ்னூண் எண்ணெய் வயலை ஐக்கிய இராச்சியத்தின் ஷெல் நிறுவனமும் மலேசியாவின் பெட்ரோனாஸ் எண்ணெய்க் கம்பனியும் பெற்றிருக்கின்றன.
அருகில் உள்ள ஹல்ஃபயா எண்ணெய் வயலின் உரிமைகள் சீன அரச பெற்றோலிய நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.
ஆனால் பாக்தாதுக்கும் டியாலா மாகாணத்துக்கும் அருகில் உள்ள எண்ணெய் வயல்களை எவரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
உலகில் மூன்றாவது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள இராக்கிய எண்ணெய் வயல்களில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு குறித்த கவலைகளே தடையாக இருக்கின்றன.
மூலம் [தொகு]
- Iraq oil development rights contracts awarded, பிபிசி, டிசம்பர் 10, 2009}}
