ஈராக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 19, 2009, பக்தாத், ஈராக்:


ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் நடுப்பகுதியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 400 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாத்தில் இந்த ஆண்டில் நடந்த மிக மோசமான வன்செயல் இதுவேயாகும்.


ஒரு சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆறு குண்டு வெடிப்புகள் ஈராக்கின் அரசு அமைச்சுகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே நடந்துள்ளது.


தலைநகரின் பாதுகாப்பு வலயமான கீரி்ன் சோன் என்ற பகுதிக்கு சற்று வெளியேயுள்ள வெளிநாட்டு அமைச்சுக்கு அருகேதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.


பாதுகாப்புச் சூழல் குறித்து ஈராக்கிய அரசு சமீபத்தில் வெளியிட்டு வரும் நம்பிக்கை அறிக்கைகளை இது கேள்விக்குறியாக்குகிறது.


இதற்கு முந்தைய தாக்குதல்கள் நகரின் வறுமை மிக்க, பாதுகாப்பு குறைவான பகுதிகளில் நடைபெற்றதாகவும், இந்த வகையில் தற்போது நடைபெற்ற தாக்குதல்கள் அசாதாரணமானவை என்றும் பாக்தாத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

மூலம்[தொகு]