கிரேக்கத்தில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து
கிரேக்க நாடு

ஞாயிறு, ஆகத்து 23, 2009, ஏதென்சு, கிரேக்கம்:


கிரேக்கத்தில் பரவிவரும் காட்டுத்தீ அந்நாட்டின் தலைநகரில் சேதங்களை ஏற்பபடுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சுற்றுச்சூழல் பேரவலம் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பெரும் சீற்றத்துடன் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வரும் நிலையில், ஏதென்சு நகரின் வடக்கு மற்றும் கிழக்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை வீடுகளை துறந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இத்தாலி, பிரான்ஸ் சைப்ரஸ் போன்ற நாடுகளிலிருந்து தீயணைப்பு விமானங்கள் உள்ளிட்ட சர்வதேச உதவிகளை காட்டுத் தீயை அணைப்பது தொடர்பில் கிரேக்க அரசாங்கம் பெற்றுள்ளது.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இதேபோல் காட்டுத் தீ பரவியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

மூலம்[தொகு]