கொங்கோவில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை குறித்த தகவல் வெளியிடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 28, 2010

கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் சென்ற ஆண்டு 2009 டிசம்பரில் 321 பேர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஒன்று வெளிவந்திருப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இப்படுகொலைகள் பற்றிய விவரம் முன்னெப்போதும் அறியப்படவில்லை.


கொங்கோவின் வட-கிழக்குப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் LRA எனப்படும் ”கடவுளின் எதிர்ப்பு இராணுவம்” (Lord's Resistance Army) என்ற தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களால் சூறையாடப்பட்டுள்ளன. இதன் போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.


இத்தீவிரவாதக் குழு நடத்துள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. எல்.ஆர்.ஏ என்ற தீவிரவாதக் குழுவினர் உகாண்டாவில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துப் பின்னர் ஆப்பிரிக்காவின் பல நாடுகளுக்கும் பரவினர்.


கொங்கோ மக்களாட்சிக் குடியரசு

விவிலியத்தின் 10 கட்டளைகளை அடிப்படையாக வைத்து உகாண்டாவில் ஆட்சி அமைப்பதே தமது கொள்கை என இக்குழுவினரின் தலைவர்கள் ஆரம்பத்தில் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகளில் பயங்காவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடைசியாக இடம்பெற்ற இத்தாக்குதலில் கிராமத்தவர்கள் பலர் கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 250 பேர் வரையில் கடத்தப்பட்டுள்ளனர்.


17 வயதுடைய ழான்-குளோட் சிங்பாட்டில் என்பவரும் அவரது நண்பர்களும் இவர்களால் கடத்தப்பட்டு பல நாட்கள் உப்பு மூட்டைகளைச் சுமந்துள்ளனர்.


"எங்களைப் பிடித்துச் செல்லும் போது எல்.ஆர்.ஏ தீவிரவாதிகள் வழியில் தென்பட்ட கிராமத்தவரைப் படுகொலை செய்தனர்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.


"அவர்கள் என்னையும் கொலை செயய்வே எண்ணினர். ஆனாலும், அவர்களுக்கு வலிமையுள்ள நபர்கள் தேவை என அவர்களின் தலைவன் கூறியதால், எம்மை அவர்கள் கொலவில்லை.”


”கடைசியாக, உன்னையும் கொலை செய்து விடுவார்கள். அதனால் இப்போதே தப்பி ஓடு” எனத் தீவிரவாதிகளுள் ஒருவர் எனக்குக் கூறினார். அவரும் எனது இனமான அசாண்டே என்ற இனத்தைச் சேர்ந்தவர் என ழான்-குளோட் தெரிவித்தார்.


கிறிஸ்துமஸ் நாளுக்குக் கிட்டவாக தாக்குதல் ஒன்று இடம்பெறும் என ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்குத் தகவல் தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் தமது படையினரை டுங்கு, நயாங்கரா போன்ற நகரங்களுக்கே அனுப்பியிருந்தனர். ஆனால் தாக்குதல் இடம்பெற்ற கிராமங்களுக்கு அவர்கள் அனுப்பவில்லை.


ட2009 டிசம்பர் 13ம் நாள் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாப்பிலி என்ற பகுதியில் இராணுவத் தலைவராக இருந்த லெப். ஜான்வியே பகாட்டி என்பவர் இக்கொலைகள் பற்றி அறிந்து அங்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்டோரை அடக்க செய்ய உதவினார்.


"நான் 268 இறந்த உடல்களை என் கண்ணால் கண்டேன்,” என அவர் கூறினார். அவர்கள் எதற்காக இக்கொலைகளைச் செய்தார்கள் என்பது குறித்து அறியப்படவில்லை.

மூலம்[தொகு]