கொழும்பு-வவுனியா இரவு தொடருந்து தடம் புரண்டதில் 36 பேர் காயம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 25, 2009


கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இரவு தொடருந்து வண்டி அநுராதபுரம் அருகில் கல்கமுவ என்ற இடத்தில் நேற்று வியாழன் அதிகாலை தடம் புரண்டதில் 36 பயணிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இவர்களில் 28 பேர் கல்கமுவ அரசாங்க மருத்துவ மனையிலும் மேலும் எட்டுப் பேர் அநுராதபுரம் அரச மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.


நான்கு பெட்டிகள் பாதையை விட்டுத் தூக்கி எறியப்பட்டுள்ளதால், தொடருந்தூப் பாதைகள் பெரும் சேதமுற்றுள்ளன. அதனைச் சரிசெய்யும் வரை கொழும்பு வவுனியா தொடருந்து சேவைகள் மாகோ வரையே இடம்பெறுமெனவும் வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் புறப்படும் ரயில்கள் அநுராதபுரம் வரை சேவையிலீடுபடும் எனவும் ரயில்வே உயரதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.

மூலம்[தொகு]