சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

டிசம்பர் 30, 2006:


முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் ஈராக் நேரம் காலை 6:00 மணியளவில் சனிக்கிழமை டிசம்பர் 30, 2006 தூக்கிலிடப்பட்டார். வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் கைகூடாமற் போகவே சதாமின் விருப்பப்படி தூக்கிலிடப்பட்டார்.

இன்று முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் என்னும் பண்டிகை நாளாகும். சதாம் உசேன் தூக்கிலிட்ட நாளும் நேரமும் முஸ்லிம்களை அதிர்ச்சியடையவைத்தது. அதாவது முஸ்லிம்கள் பெருநாள் காலை தொழுகைக்கு செல்லும் நேரத்தில் இது நடத்தப்பட்டது. பொதுவாக இராக்கின் சட்டப்படி பண்டிகை நாட்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படுவதில்லை.

உலகில் அதிகாரப்பூர்வமாக ஒரு நாட்டின் முன்னைய தலைவர் ஒருவரைத் தூக்கிலிடுவதை முதன்முறையாக வீடியோ மூலம் பதிவு செய்து ஒளிபரப்பட்டது இஸ்லாமிய சமூகங்களை அதிர்சியடையவும் ஆத்திரமூட்டவும் செய்தது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் "சதாம் உசேன் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே தூக்கிலிடப்பட்டதாகக்" கூறினார்.

சதாம் உசேனை தூக்கிலிடும்பொழுது செல்பேசி வழியாக வீடியோ எடுத்தது தொடர்பாக ரானுவ அதிகாரி ஒருவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

உசாத்துணைகள்[தொகு]