சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 22, 2015

நவீன சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கபடுபவரும் 31 ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராக இருந்த 91 வயதுடைய லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிட்சை பலனலளிக்காமல் ஞாயிறு அன்று மரணமடைந்தார்.


நாட்டு மக்கள் மரியாதை செலுத்துவதற்காக ஒரு வாரம் உடல் வைக்கப்பட்டிருக்கும் என்றும் மார்ச்சு 29 அன்று உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் இறந்த தகவல் சிங்கப்பூர் நேரம் அதிகாலை 3.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது. 3.18 மணிக்கு அவர் இறந்தார். மக்களின் செயல் கட்சியின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். 1959 முதல் அக்கட்சியே சிங்கப்பூரை ஆள்கிறது. இவர் சிங்கப்பூரின் முதல் பிரதமராவார்.


1990 ஆம் ஆண்டு இவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 2011 வரை அமைச்சரவையில் பங்கு பெற்றார். இறக்கும் வரை இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் கேம்பிரிச்சில் படித்த வழக்கறிஞர் ஆவார்.


இவரின் மூத்த மகன் லீ சீன் லூங் 2004இல் இருந்து பிரதமராக உள்ளார்.

மூலம்[தொகு]