சிறுகோள் ஒன்றில் முதற்தடவையாக பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 29, 2010


முதற்தடவையாக சிறுகோள் ("asteroid") ஒன்றின் மேற்பரப்பில் நீர்-பனிக்கட்டியைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


சிறுகோள் ஒன்று

சூரியனில் இருந்து 480 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் 24 தெர்மிஸ் என்ற சிறுகோளை அறிவியலாளர்கள் முதற்தடவையாக ஆராய்ந்துள்ளார்கள்.


இக்கண்டுபிடிப்பு பூமியில் காணப்படும் பெருமளவு நீர் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்ற கொள்கையை மேலும் உறுதிப்படுத்தலாம் என நேச்சர் என்ற அறிவியல் இதழுக்கு மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் உம்பெர்ட்டோ காம்பின்ஸ் கருத்துத் தெரிவித்தார்கள்.


இக்கண்டுபிடிப்பு தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வு முடிவுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் அங்கு சேதன, மற்றும் கார்பன் அதிகமுள்ள சேர்வைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூலம்[தொகு]