சிலியில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 27, 2010

தென்னமெரிக்க நாடான சிலியின் நடுப்பகுதியில் இன்று 8.8 அளவு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 708 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் சிவப்பு நிற புள்ளியால் குறிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சண்டியாகோவில் இருந்து 325 கிமீ தென்மேற்கே, கொன்செப்சியன் நகரில் இருந்து 115 கிமீ வட-கிழக்கே இன்று அதிகாலை 0634 GMT நேரத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.


பாதிகக்ப்பட்ட பிரதேசங்களில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசுத்தலைவர் மிசெல் பாசிலெட் அறிவித்துள்ளார்.

ஹவாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் பசிபிக் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னராக அண்டார்க்டிக்கா, நடு அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.


சண்டியாகோ விமானநிலையம் மூடப்பட்டு அனைத்து வான்சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


பரல் என்ற நகரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகருக்கு 20 கிமீ வடக்கேயுள்ள கோலினா என்ற நகரில் வேதித் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றி எரிவதாக சிலியின் தொலைக்காட்சி அறிவித்தது. ஆனாலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

2010 சிலி நிலநடுக்கத்தால் உண்டான சுனாமியின் பயண நேரம் கணிக்கப்பட்ட வரை படம்

கடைசியாக சிலியில் 1960 ஆம் ஆண்டில் 9.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது அங்கு 1,655 பேர் கொல்லப்பட்டனர்.

பசிபிக் கடலிலுள்ள நசுக்கா நிலத்தட்டு தென் அமெரிக்க நிலத்தட்டுக்கு அடியில் செருகியதால் இந்த நிலக்கடுக்கம் ஏற்பட்டதாக கருதப்படுகிறது
2010 சிலி நிலநடுக்கத்தால் உண்டான சுனாமியின் தொடக்க ஆற்றல் கணிப்பு மாதிரி

மூலம்