சீனா சிக்குவான் மாகாண நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 200 ஐத் தாண்டியது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 21, 2013

சீனாவின் தென்மேற்கு பகுதி மாகாணமான சிக்குவானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 203 என அறிவிக்கப்பட்டுள்ளது. 11,500 பேர் வரை காயமடைந்துள்ளனர் என அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


யான் பிரதேசத்தில் நில அதிர்வுப் படம்

மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் பலத்த சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். நிலச்சரிவுகளினால் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் பலர் கால்நடையாகவே அங்கு செல்கிறார்கள். பாதுகாப்புப் படையினர் இரவு பகலாக பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுவதிலும், காயப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதிலும் முனைந்துள்ளனர்.


உள்ளூர் நேரம் காலை 8.02 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை சீன வானிலையியல் துறை 8.0 ரிக்டர் அளவு என்றும் அமெரிக்க நில அளவாய்வத் துறை 7.0 என்றும் தெரிவித்து பின் அதனை 6.6 என்று குறைத்தது. யான் நகரத்தில் பாண்டா கரடிகளை பாதுகாக்கும் காப்பகம் உள்ளது, நிலநடுக்கத்தால் அவற்றுக்கு பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணம் சீனாவின் இயற்கை எரிவளி உற்பத்தி செய்யும் நான்கு முதன்மையான மாகாணங்களில் ஒன்றாகும்.


மூலம்[தொகு]