தில்லியில் பாலம் உடைந்து வீழ்ந்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 12, 2009 தில்லி, இந்தியா:

தில்லியில் மெட்ரோ ரயில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பொறியியலாளர் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

தெற்கு தில்லி லஜ்பத் நகரிலுள்ள தருத்பூர் என்ற இடத்தில் லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. பாலத்துக்கான தூண்கள் நிறுவப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது, அங்கு வேலை செய்துகொண்டிருந்த 3 தொழிலாளர் உள்பட 5 பேர் இறந்தனர்.

தூண் வடிவமைப்பில் இருந்த கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பாரிய சீமெந்து சிலப்பிற்குள் கீழ் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து சிலப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்[தொகு]