தென்னாப்பிரிக்காவில் 1960 சார்ப்வில் படுகொலை நினைவுகூரப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 22, 2010

தென்னாப்பிரிக்காவில் ஷார்ப்வில் என்னும் இடத்தில் அமைதியாக ஊர்வலத்தில் ஈடுபட்ட கறுப்பினத்தவரை பொலிஸ்காரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் 50வது ஆண்டு நிறைவு நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நினைவு கூரப்பட்டது.


சார்ப்வில் படுகொலை ஓவியம்

1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாள், அடையாள அட்டைகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ஆட்சேபித்து ஷார்ப்வில் என்ற நகரில் கறுப்பின மக்கள் ஊர்வலம் நடந்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அதில் 69 பேர் கொல்லப்பட்டார்கள், குறைந்தது 180 பேர்வரை காயமடைந்தார்கள். இச்சூட்ட்ச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் எவரும் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை.


தென்னாபிரிக்க விடுதலைப்போராட்டம் சந்தித்த மிகவும் கொடூரமான படுகொலைத் தருணம் அது.


தென்னாப்பிரிக்காவில் இந்நாள் மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் ஆராதனைகள், சொற்பொழிவுகள் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.


சார்ப்வில் படுகொலைகளைத் தொடர்ந்து ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் மற்றும் பான் ஆப்பிரிக்கானிய காங்கிரஸ் போன்ற அமைப்புகள் நாட்டில் தடை செய்யப்பட்டன. நிறவெறிக்கெதிரான ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு இந்நிகழ்வு ஏதுவாக அமைந்தது.

மூலம்[தொகு]