நாம் தமிழர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 16, 2011

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் நேற்றிரவு 10மணி அளவில் இனந்தெரியாதோரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இவரை சிலர் வெட்டிப் படுகொலை செய்தனர்.


தமிழ் தேசியத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரில் படுகாயமடைந்த மக்களுக்கு உதவ, மருந்து பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளி வந்த முத்துக்குமார் நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளராக செயல்பட்டு வந்தார்.


மதுரையை சே‌ர்‌ந்தவ‌ர் மு‌த்து‌க்குமா‌ர். உற‌வின‌ர் ‌வீ‌ட்டி‌ற்காக புது‌க்கோ‌ட்டை வ‌ந்த அவ‌ர் தமது ந‌ண்ப‌ரும் வழ‌க்க‌றிஞ‌ருமான போ‌த்த‌ப்பனுட‌ன் அ‌ண்ணா ‌சிலை கடை‌த் தெரு‌வி‌ல் நே‌ற்‌றிரவு பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்த போதே வெட்டப்பட்டார். முத்துக்குமார் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமானார். படுகாயமடைந்த அவரது நண்பர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மூலம்[தொகு]