நைஜீரியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் பலர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 26, 2009 நைஜீரியா:


வடக்கு நைஜீரியாவில் காவல்துறையினருக்கும் தலிபான்களால் உந்தப்பட்டவர்கள் என நம்பப்படும் இசுலாமியத் தீவிரவாதக் குழுவொன்றுக்குமிடையிலான மோதல்களில் முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்தக் குழுவிலிருந்து ஆயுதம் ஏந்திய சிலர், பௌச்சி மாநிலத்திலுள்ள உள்ளூர் காவல் நிலையமொன்றைத் தாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


ஆயுதக் குழுவினரின் சந்தேகத்திடமான மறைவிடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது பலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


யோபே மாநிலத்தில் போடிஸ்கம் என்ற நகரில் காவல் நிலையம் ஒன்று தீக்கிரையானதாக பிபிசி தெரிவிக்கிறது. அயம் மாநிலமான போர்னோவிலும் காவல்துறை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பௌச்சி நகரில் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.


வடக்கு நைஜீரியாவில் சரியாச் சட்டம் அமுலில் இருந்தாலும் அல்கைடாவுடன் நேரடித் தொடர்புகள் இருந்ததற்கான வரலாறுகள் இல்லை. நைஜீரியாவின் 140 மில்லியன் மக்களில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளனர்.

மூலம்[தொகு]