பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி
விக்கிசெய்தி இருந்து
வெள்ளி, டிசம்பர் 4, 2009
பாகிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்
- 25 ஏப்ரல் 2012: அணுவாயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய ஏவுகணையை பாக்கித்தான் பரிசோதித்தது
- 20 ஏப்ரல் 2012: பாக்கித்தானில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 127 பேர் உயிரிழப்பு
- 7 ஏப்ரல் 2012: பாக்கித்தானில் பனிச்சரிவு, நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் புதையுண்டனர்
- 23 மார்ச் 2012: 2012 ஆசியக் கிண்ணத்தை பாக்கித்தான் அணி வென்றது
- 18 பெப்ரவரி 2012: பாக்கித்தானில் மசூதி அருகே குண்டு வெடித்ததில் 26 பழங்குடியினர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் அமைவிடம்
பாக்கிசுத்தானில் இராணுவ நகரான இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35க்கு மேற்பட்டோர் பலியானார்கள். இதில் 17க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பலியானார்கள். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து விட்டு வந்தவர்களை நோக்கி 4 பேர் சுட்டதாக தெரிகிறது. அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் 1 மணி நேரத்திற்கும் மேல் சண்டை நடந்துள்ளது. பின் 3 பேர் தங்கள் உடலில் கட்டப்பட்ட குண்டுகளை இயக்கி இறந்துள்ளார்கள்.
தாலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளார்கள். வர்கிஸ்த்தான், சுவாட் ஆகிய இடங்களில் பாக்கிசுத்தான் இராணுவம் அடைந்த வெற்றிகளை தொடர்ந்து தாலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பாக்கிசுத்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.
[தொகு] மூலம்
- "Pakistan Rawalpindi mosque suicide attack kills many". பிபிசி, டிசம்பர் 4, 2009
