பாக்தாத் தொடர்குண்டு வெடிப்பில் 126 பேர் பலி
செவ்வாய், டிசம்பர் 8, 2009
- 24 பெப்ரவரி 2012: ஈராக்கில் இடம் பெற்ற தொடர் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- 16 ஜனவரி 2012: ஈராக்கில் மத நிகழ்வில் மனிதக்குண்டு வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- 23 டிசம்பர் 2011: ஈராக் தொடர் குண்டு வெடிப்புக்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- 18 டிசம்பர் 2011: அமெரிக்கப் படையின் கடைசி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது
- 14 செப்டம்பர் 2011: ஈராக்கில் சியா முசுலிம்கள் 22 பேர் சுட்டுக்கொலை
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செவ்வாய் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் குறைந்தது 126 பேர் உயிரிழந்தார்கள். 448 பேர் காயம் அடைந்துள்ளார்கள். முதல் குண்டானது நகரின் தெற்கு பகுதியிலுள்ள டோரா மாவட்டத்தில் ரோந்து சென்ற காவலர்கள் மீது நடத்தப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் அடுத்த நான்கு குண்டுகள் அருகிலுள்ள அலுவலக கட்டடங்களுக்கு அருகில் வெடித்தன. மார்ச் மாதம் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு நாட்டை சீர்குலைக்க அல்-கொய்தா நடத்திய தாக்குதல் இது என முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அல்-ருபாய் கூறினார்.
டோரா பகுதி குண்டுவெடிப்புக்கு பின் சௌர்ஜா சந்தையில் குண்டு வெடித்தது. நல வாழ்வு அமைச்சகம் இச்சந்தைக்கு அருகில் உள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம், முஷ்ட்அன்சாரி பல்கலைக்கழகம் மற்றும் நுண் கலை நிறுவன கட்டடங்களுக்கு அருகிலும் குண்டுகள் வெடித்தன.
இத்தாக்குதல்கள் பாக்தாத்தின் இதயப் பகுதியில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுலுள்ள சிறப்பு அரசு அமைச்சக கட்டடங்கள் அரசு எதிர்ப்பு போராளிகளின் வீச்சிலிருந்து தப்ப முடியவில்லை என்பதை காட்டுகிறது.