மலேசியாவில் கணித அறிவியல் பாடங்கள் மலே மொழியில் கற்பிக்கப்படும்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 11, 2009 மலேசியா:

அறிவியல், கணித பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கை அதன் நோக்கங்களை அடையத் தவறி விட்டது என்பதை மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே அந்தக் கொள்கை கைவிடப்பட்டு 2012 ம் ஆண்டு தொடக்கம் தேசியப் பள்ளிகளில் அவ்விரு பாடங்களும் பாஹாசா மலேசியாவில் போதிக்கப்படும் என்று துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் அறிவித்தார்.

பல மாதங்கள், மையநீரோட்ட ஊடகங்களிலும் மாற்று ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்ட பின்னர், அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது .இனி, பகாசா மலேசியாவிலும் மாணவர்களின் தாய்மொழிகளிலும் அப்பாடங்கள் கற்பிக்கப்படும்.

இவ்விவகாரத்தில் மக்களின் கருத்தை அறிய டாக்டர் மகாதிர் அவரது வலைப்பதிவில் ஒரு கணிப்பை நடத்தினார். அதில் கலந்துகொண்டவர்களில் 72 விழுக்காட்டினர் அரசாங்க முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த முன்னாள் பிரதமர்தான் அறிவியல், கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையைக் கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]