மைக்ரோசாப்ட், யாகூ! ஆகியவை இணைந்து பணியாற்ற முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 29, 2009 அமெரிக்கா:

முன்னணி இணையதள தேடல் இயந்திரமாக உள்ள கூகிள் நிறுவனத்துடன் போட்டி போடும் முயற்சியாக, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்டும், யாகூ!வும் ஒரு இணையதள தேடல் இயந்திரத்தை உருவாக்க கூட்டு சேருவதாக அறிவித்துள்ளன.


இந்த உடன்படிக்கையின்படி, யாகூ தளங்களில் மைக்ரோசாப்டின் பிங் தேடல் இயந்திரம் பயன்படுத்தப்படும். மைக்ரோசாப்டின் கம்யூட்டர் தொழில்நுட்பத்தை தனது விளம்பர வருவாயை கையாள யாகூ பயன்டுத்தும்.


இந்த உடன்படிக்கை காரணமாக ஆண்டுதோரும் தனக்கு ஐநூறு மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்று யாகூ கூறியுள்ளது.


கடந்த ஆண்டு பல பில்லியன் டாலர்கள் கொடுத்து யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் முன்வந்தது. ஆனால் மைக்ரோசாப்டின் இந்த முயற்சி நிராகரிக்கப்பட்டது.

மூலம்[தொகு]