ரஷ்யாவில் தற்கொலைத்தாக்குதலில் ஆறு காவல்துறையினர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 6, 2010


இரசியாவின் வடக்கு கவ்க்காஸ் மாநிலமான தாகெஸ்தானில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 6 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.


ரஷ்யாவில் தாகெஸ்ட்தான் குடியரசு

குண்டுதாரி 70 கிகி வெடிபொருட்கள் அடங்கிய சூமையுந்து ஒன்றை காவல்நிலையம் ஒன்றிற்குள் செலுத்திய போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.


எனினும் காவல்துறை வாகனம் ஒன்றின் மீதே சுமையுந்து மோதி வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனால் மேலும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.


பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் தாகெஸ்தானில் இப்படியான தாக்குதல்கள் கடந்த ஆண்டு முதல் அதிகரித்திருந்தது.


தாகெஸ்தானுக்கு அண்டை மாநிலமான செச்சினியாவில் 1994 ஆம் ஆண்டில் இருந்து பிரிவினைவாதிகளுக்கெதிராக உருசியப் படைகள் இரு முறை போர் தொடுத்திருந்தனர். இப்ப்ப்ரச்சினை காரணமாக இதுவரையில் 100,000 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்தனர்.

மூலம்[தொகு]