ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டம்பர் 20, 2009, கொங்கோ:

கொங்கோ மக்களாட்சிக் குடியரசு


1994 ஆம் ஆண்டில் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மேயர் ஒருவரை கொங்கோ மக்களாட்சிக் குடியரசு நாடு கடத்தியுள்ளது.


2,000 துட்சி இனத்தவரைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிரெகரி ண்டாகிமானா என்ற பெயருடைய இக்குற்றவாளி இடிக்கப்பாட்ட தேவாலயம் ஒன்றில் ஒளிந்திருக்கக் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் வடக்கு கீவு என்ற நகரில் ருவாண்டா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து கைது செய்யப்பட்டார்.


ருவாண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள தான்சானியாவுக்கு இவர் நாடுகடத்தப்படுள்ளார். இக்கைது மூலம் ருவாண்டாவுக்கும் கொங்கோவுக்கும் இடையில் இருந்து வந்த முறுகல் நிலை தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவரது மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்தது.


மூலம்[தொகு]