வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பெரும் பனிப்பொழிவு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 7, 2010


ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 90 ஆண்டுகளில் இது மிக கடுமையான பனிப்பொழிவாக பார்க்கப்படுகிறது.


வாஷிங்டன் மற்றும் பால்ட்டிமோர் பகுதிகளில் சூறாவளி காற்றால் பனி எங்கும் கொட்டியுள்ளது, இதனால் மரங்கள் கார்கள் மற்றும் கட்டிடங்கள் மீது விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது.


இது மிக மிக ஆபத்தான பனிப்புயலின் தொடக்கம் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.


பனிப் புயலால் பல மில்லியன் மக்கள் நாள் கணக்கில் வீடுகளுக்குள்ளே சிக்கியிருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. இருவர் உயிரிழந்தனர்.


இந்தியானா மாநிலத்திலிருந்து பென்சில்வேனியா வரையிலும், நியூயார்க், வட கரோலைனா மாநிலங்களின் சில பகுதிகளிலும் வீசிய பனிப்புயலால், வாஷிங்டன் வட்டாரத்திலுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. அதோடு, வாஷிங்டன் டிசி, மேரிலாந்து, வேர்ஜீனியா மாநிலங்களில் நெருக்கடி நிலையும் அறிவிக்கப்பட்டது.


தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு 76 சதமமீட்டர் (30 அங்குலம்) உயரத்திற்குப் பனி கொட்டும் என்றும் கூறப்படுகிறது. சனிக்கிழமை வரை 60 சமீ வரை பனிக்கொட்டியது.


கடைசியாக, 1922ம் ஆண்டு ஜனவரி மாதம் வாஷிங்டனில் கடுமையான பனிப்புயல் வீசி, கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப் பட்டதோடு, 28 அங்குலம் உயரத்திற்குப் பனி கொட்டியது.

மூலம்[தொகு]