சோமாலி தலைநகரில் இருந்து மக்களை வெளியேறப் பணிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 12, 2010

சோமாலியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை அடுத்து தலைநகரின் போர் முனைகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு மொகதிசுவின் நகரத்தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.


கடந்த மூன்று நாட்களில் மட்டும் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி அறிவித்துள்ளது.


நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசுத் தாக்குதல்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது எனவும், இதனால் பொதுமக்கள் 2 கிமீ தூரத்துக்குக் குறையாமல் வெளியேறுமாறு மேயர் அப்துரிசாக் முகமது நோர் கூறியுள்ளார்.


இரண்டு தசாப்தகால உள்நாட்டுப் போரினால் மொகதிசுவில் இருந்து அரைவாசிக்கும் அதிகமானோர் வெளியேறியிருந்தனர்.


மே 2009 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்ற சண்டைகளில் இப்போது நடைபெறுவது மிகவும் உக்கிரமானது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். ஐநா ஆதரவிலான பலவீனமான சோமாலிய அரசைக் கவிழ்ப்பதற்காக இசுலாமியத் தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள்.


கடந்த ஆறு வாரங்களில் 33,000 பேர் மொகதிசுவில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பிட்டிருக்கிறது.


தீவிரவாதிகளின் முன்னணி அரண்களை நோகி அரசுப் படைகள் எறிகனைகளை வீசி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்[தொகு]