பாக்தாத் தொடர்குண்டு வெடிப்பில் 126 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 8, 2009


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செவ்வாய் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் குறைந்தது 126 பேர் உயிரிழந்தார்கள். 448 பேர் காயம் அடைந்துள்ளார்கள். முதல் குண்டானது நகரின் தெற்கு பகுதியிலுள்ள டோரா மாவட்டத்தில் ரோந்து சென்ற காவலர்கள் மீது நடத்தப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் அடுத்த நான்கு குண்டுகள் அருகிலுள்ள அலுவலக கட்டடங்களுக்கு அருகில் வெடித்தன. மார்ச் மாதம் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு நாட்டை சீர்குலைக்க அல்-கொய்தா நடத்திய தாக்குதல் இது என முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அல்-ருபாய் கூறினார்.

டோரா பகுதி குண்டுவெடிப்புக்கு பின் சௌர்ஜா சந்தையில் குண்டு வெடித்தது. நல வாழ்வு அமைச்சகம் இச்சந்தைக்கு அருகில் உள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம், முஷ்ட்அன்சாரி பல்கலைக்கழகம் மற்றும் நுண் கலை நிறுவன கட்டடங்களுக்கு அருகிலும் குண்டுகள் வெடித்தன.

இத்தாக்குதல்கள் பாக்தாத்தின் இதயப் பகுதியில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுலுள்ள சிறப்பு அரசு அமைச்சக கட்டடங்கள் அரசு எதிர்ப்பு போராளிகளின் வீச்சிலிருந்து தப்ப முடியவில்லை என்பதை காட்டுகிறது.

மூலம்

பிபிசி