பயனர் பேச்சு:Inbamkumar86

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், Inbamkumar86!

வாருங்கள் Inbamkumar86, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Inbamkumar86, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--ஜெ.மயூரேசன் 10:07, 28 ஜூலை 2010 (UTC)

விக்கி செய்திகளுக்கு வருக[தொகு]

விக்கி செய்திகளில் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடர்தும் பல செய்திகளை எழுத வேண்டுகின்றோம். --ஜெ.மயூரேசன் 10:19, 28 ஜூலை 2010 (UTC)

நன்றி. அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள் தமிழில் குறைவாக உள்ளது என்று நினைக்கிறேன் . ஆகவே நான் அவ்வ பொழுது அவ்வையான செய்திகளை விக்கியில் சேர்க்க எண்ணுகிறேன் . --Inbamkumar86 08:51, 29 ஜூலை 2010 (UTC)

படங்கள் சேர்ப்பது[தொகு]

//விக்கி செய்தியில் நாம் மூலம் என்று பிநினைப்பு இட்ட பின் அந்த இணைப்பில் உள்ள புகைப்படங்களை விக்கியில் சேர்க்கலாமா?// என்று கேட்டிருந்தீர்கள். அப்படி இணைக்க முடியாது. அவற்றுக்குக் காப்புரிமை விலக்கு இருந்தால் அவற்றை விக்கி காமன்சில் முறையாகப் பதிவேற்றி விட்டு, விக்கிசெய்தியில் இணைக்கலாம். இப்போதைக்கு விக்கி காமன்சில் உள்ள படங்கள் மட்டுமே விக்கிசெய்தியில் இணைக்க முடியும். தனியாக விக்கிசெய்திக்கு படிமங்கள் தரவேற்ற முடியாதுள்ளது.

மேலும், உங்கள் செய்திகள் அனைத்தும் மிகவும் தரம் வாய்ந்தவையாக உள்ளன. பாராட்டுக்கள். உங்கள் எழுத்துக் குறித்து ஒரு சில கருத்துக்களை இங்கு தருகிறேன். எடுத்துக்காட்டாக நீங்கள் எழுதியிருந்த பந்தி ஒன்றைக் கீழே தருகிறேன்: //வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது . அந்த சுற்றம் டெல்லி , மும்பை , கொல்கத்தா , சென்னை மற்றும் தமிழ் நாடு , மகாராசுத்திரா மற்றும் கோவா , குசராத் , கரியானா , உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது .//

வசனம் ஒன்றில் நிறுத்தற்புள்ளிக்கும் கடைசிச் சொல்லிற்கும் இடையில் எப்போதும் இடைவெளி வரமாட்டாது. அதேபோல் தான் காற்புள்ளிக்கும் கடைசி சொல்லிற்கும் இடையில் இடைவெளி வராது. இதன் திருத்தம் வருமாறு:

//வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது. அந்த சுற்றம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் தமிழ் நாடு, மகாராசுத்திரா மற்றும் கோவா, குசராத், கரியானா, உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது.//

மேலும் ஒன்று: தலைப்பில் எப்போதும் நிறுத்தற்புள்ளி இடுவதில்லை என்பதையும் கவனியுங்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 09:14, 29 ஜூலை 2010 (UTC)

விக்கிப்பீடியா தொடுப்பு[தொகு]

விக்கிசெய்தியிலிருந்து விக்கிப்பீடியாவிற்கு [[w:ஐப்பசி|]] என்று கொடுக்கவேண்டும். உங்கள் பயனர் பக்கத்தை இதுபோன்று இணைப்பு கொடுக்கலாம் -- மாஹிர் 11:37, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

வாழ்த்துகள்[தொகு]

வணக்கம் இராச்குமார், விக்கிசெய்தியில் உங்கள் சிறப்பான பங்களிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக நீங்கள் தரவேற்றிய ஒலிச் செய்திகள் மிகத் தரமானதாக உள்ளன. நான் முன்னர் தரவேற்றிய ஒலிச்செய்தியை மென்பொருளைக் கொண்டு உருவாக்கினேன். இப்போது அந்த மென்பொருள் சிறப்பாக வேலை செய்யவில்லை. நன்றி.--Kanags \பேச்சு 23:11, 6 ஜூலை 2012 (UTC)

ஒலிச் செய்தியைக் கட்டுரையில் இணைக்க வார்ப்புரு:Audio box 2 என்ற வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். நீங்கள் உருவாக்கும் ஒலிக்கோப்புகளுக்கு பெயரிடும் போது TA முன்னோட்டையும் சேர்த்துப் பெயரிடுங்கள். உ+ம்: File:TA-130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின.ogg. இந்தப் பக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்.--Kanags \பேச்சு 23:28, 6 ஜூலை 2012 (UTC)
தங்களின் தகவலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. மறுமுறை நீங்கள் கூறிய வார்ப்புருவையும், ஒலிக்கோப்பின் முன்னொட்டு இடுதலையும் மறக்காமல் செய்கிறேன். --Inbamkumar86 (பேச்சு) 19:18, 7 ஜூலை 2012 (UTC)

மிக்க மகிழ்ச்சி![தொகு]

இங்கு ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நீங்கள் எழுதுவது குறித்து மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 13 ஏப்ரல் 2013 (UTC)

அறிவியல் செய்திகள்[தொகு]

வணக்கம் ராச்குமார், அறிவியல் கட்டுரைகளை எழுதுவதற்கு நன்றி. விக்கிசெய்திகளில் செய்திகளை எழுதுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அறிவியல் கட்டுரையை ஒரு செய்திக் கட்டுரையாகவே எழுத வேன்டும். ஆய்வுக் கட்டுரையாக எழுத முடியாது. நீங்கள் இன்னும் ஒரு இதழில் எழுதிய ஒரு கட்டுரையை வரிக்கு வரி அப்படியே எழுதுவது விரும்பத்தக்கதல்ல. தங்கள் கட்டுரைகள் அனைத்தையும் நான் இன்னும் பார்க்கவில்லை. உதாரணத்திற்கு நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி என்ற கட்டுரையை எடுப்போம். இக்கட்டுரை ஒரு ஆய்வுக் கட்டுரையாகவே உள்ளது. குறைந்தது இரண்டு வெளிச்செய்திகளை மூலமாகக் கொண்டே எழுதப்பட வேண்டும். அது செய்திக் கட்டுரையாகவே இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கட்டுரையையே ஆதாரமாகத் தந்திருக்கிறீர்கள். மேலும், கட்டுரை ஒன்றை எழுதி விட்டு வெறொருவர் மேற்பார்வை இட வேண்டும். அதன் பின்பே வெளியிடப்பட வேண்டும். தற்போது செல்வசிவகுருநாதனும் நானுமே இவ்வாறு மேற்பார்வையிடும் தகுதியுடையவர்களாக உள்ளோம். மேலும் பின்னர்.--Kanags \பேச்சு 09:24, 18 ஏப்ரல் 2013 (UTC)

வணக்கம் கனகு. ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையாக கொண்டு தான் அனைத்து அறிவியல் செய்திகளும் உள்ளன. மூலங்கள் எத்தனை வேண்டுமானாலும் இணையத்தில் கிடைக்கப் பெறும். நான் எடுத்துத் தொகுத்துவிடுகிறேன். ஒரு இதழில் நான் எழுதிய அனைத்து உள்ளடக்கங்களையும் நான் சேர்த்துள்ளேன். அவ்விதழை நடத்துவது நான் தான்; நான் ஒருவன் மட்டுமே அதனை நடத்துகிறேன். அதற்கு காப்புரிமை விலக்கு அழிக்க என்னால் முடியும். அவ்விதழில் நான் எழுதியக் கட்டுரைகளை மட்டுமே நான் விக்கிச்செய்திகளில் சேர்த்துள்ளேன். ஏனென்றால் இனி நான் அனைத்து அறிவியல் செய்திகளையும் விக்கியில் மட்டும் எழுதலாம் என்ற எண்ணத்தில். ஆனால் விக்கியில் சற்று செய்தி நடைகளை மாற்ற வேண்டும் என்பதை முன்பே உணர்ந்திருந்தேன். அதனை திருத்தங்கள் செய்யவும் விரும்புகிறேன். அதாவது, நான் என்ன சொல்கிறேன் என்றால் எனது ஆய்வுக் கட்டுரை நடையில் உள்ளவற்றை விக்கிச்செய்தியாக்க விதிமுறைக்குள் வரும்படி திருத்தங்கள் செய்ய விரும்புகிறேன். நீங்களும் முடிந்தால் திருத்தங்கள் செய்யுங்கள். பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளும் sciencenews.org என்ற இதழில் வெளியான செய்திக் கட்டுரைகளின் மொழிப்பெயர்ப்பாகவே இருக்கும்.
மேலும் இனி மேற்பார்வையாளர்களின் அனுமதிக்கு பின் நான் வெளியிடுகிறேன். தற்போது நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி என்ற கட்டுரையை செய்திக் கட்டுரையாக மாற்ற முயற்சிக்கிறேன். நன்றி --Inbamkumar86 (பேச்சு) 10:33, 18 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி ராஜ்குமார், தொடர்ந்து எழுதுங்கள். ஆனாலும், நீங்கள் எழுதும் விரைவில் கட்டுரைகளைத் திருத்த முடியுமா என்பதில் ஐயம் உள்ளது. ஓரளவு விக்கிச்செய்தி நடை புரிந்து கொள்ள முடியும் என்றால் நீங்களே திருத்தலாம். முடிந்த வரையில் உதவுவேன். மேலும், அண்டார்க்டிக்கா பற்றிய செய்தியைத் திருத்தி வெளியிட்டிருக்கிறேன். சரியா எனப் பாருங்கள். தலைப்பு உகந்ததா எனப் பாருங்கள். தகவல் பிழைகள் இருந்தால் தயங்காமல் திருத்துங்கள்.--Kanags \பேச்சு 11:32, 18 ஏப்ரல் 2013 (UTC)
திருத்தப்படாத புதிய அறிவியல் கட்டுரைகளை நீக்கியிருக்கிறேன். மீதமுள்ள கட்டுரைகளை விரைவில் திருத்தி வெளியிடுகிறேன். அறிவியல் கட்டுரைகளை எளிய தமிழில் அனைவருக்கும் புரியக் கூடியதாக எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனைய செய்திக் கட்டுரைகளும் அவ்வாறே எழுத வேண்டும். புரிதலுக்கு நன்றி.--Kanags \பேச்சு 23:44, 19 ஏப்ரல் 2013 (UTC)

The Wikinewsie Group[தொகு]

Hi. I apologize for not writing in Tamil. If you have not seen meta:The Wikinewsie Group, please consider taking a look and signing up as a supporter of the organization's creation. It might be very beneficial for any Indian based Wikinews contributors in any language. We are planning to have a meeting in the first week or two of May. If you sign up, please visit meta:The Wikinewsie Group/Meetings and indicate which time works best for you. --LauraHale (பேச்சு) 07:56, 20 ஏப்ரல் 2013 (UTC)

ஒருங்குறியில் ஔ[தொகு]

ராஜ்குமார் ஒருங்குறியில் ஔ என்ற எழுத்தை a+u என்றே தட்டெழுத்த வேண்டும். o+La என தட்டெழுத்தக்கூடாது. vauvaal என எழுத வேண்டும். veLavaal என எழுதக்கூடாது.--Kanags \பேச்சு 12:30, 20 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி கனகு அவர்களே. இதை எப்படி தட்டெழுத்திடுவது என்று அறியாமல் தான் இப்படி எழுதினேன். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. --Inbamkumar86 (பேச்சு) 13:38, 20 ஏப்ரல் 2013 (UTC)

The Wikinewsie Group provisional board selection meeting time[தொகு]

Hi. I apologize for not writing in Tamil. This is to inform you that the meeting for the provisional board selection meeting for meta:The Wikinewsie Group will take place in வார்ப்புரு:Irc on May 4, 2013 at 13:00 UTC, which is 8:00 in Mexico City, 9:00 in New York City, 15:00 in Berlin and 23:00 in Sydney. If you are interested in being on the provisional board but cannot attend, please comment at meta:Talk:The Wikinewsie Group/Meetings to let the community know. --LauraHale (பேச்சு) 21:38, 26 ஏப்ரல் 2013 (UTC)

முகநூலில் விக்கிசெய்தி[தொகு]

கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் விக்கிசெய்திகளை இணைக்க முடியவில்லை. என்ன காரணம்? உங்களுக்கு முடிகிறதா?--Kanags \பேச்சு 10:15, 12 மே 2013 (UTC)[பதிலளி]

நிலவில் நீர் பற்றிய செய்தியின் தலைப்பை மாற்றியிருக்கிறேன். அத்தலைப்பு உங்களுக்கு ஏற்புடையதா?--Kanags \பேச்சு 10:40, 12 மே 2013 (UTC)[பதிலளி]
நான் முன்பே இந்த வழுவை உணர்ந்தேன். சில கட்டுரைகள் முகநூலில் பகிர முடியவில்லை. சில கட்டுரைகள் பகிர முடிகிறது. வார்ப்புருவில் ஏதேனும் பிழையுள்ளதா என்பதைப் பார்க்கலாம். ஒரு வேளை நீண்ட தலைப்பாக இருப்பதினால் சில செய்திகளை பகிரமுடியவில்லையா ? எனவும் தோன்றுகிறது. வேண்டுமென்றால் புதிய வார்ப்புருவை உருவாக்கலாம். நிலவில் நீர் பற்றிய செய்தியின் தலைப்பை மாற்றியதில் எனக்கு உடன்பாடே. :)--Inbamkumar86 (பேச்சு) 11:12, 12 மே 2013 (UTC)[பதிலளி]
நீண்ட தலைப்புகளில் பிரச்சினை இல்லை. முகநூலில் இணைப்பு preview கிடைத்த பின்னர் தலைப்பைச் சுருக்கினால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் இப்போது preview வருவதில்லை என்பது தான் பிரச்சினை.--Kanags \பேச்சு 11:20, 12 மே 2013 (UTC)[பதிலளி]
நான் வீட்டிற்கு சென்றவுடன் preview கிடைக்கிறதா என கூறுகிறேன். எனது அலுவலகத்தில் முகநூல் அணுக்கம் இல்லை. --Inbamkumar86 (பேச்சு) 11:37, 12 மே 2013 (UTC)[பதிலளி]

சிறீதரன் . என்னாலும் பகிர முடியவில்லை. ஜி பிளஸ்ஸில் பகிர முடிகிறது. --Inbamkumar86 (பேச்சு) 14:03, 12 மே 2013 (UTC)[பதிலளி]

பிரிவியூ கூட வரவில்லை. ஆனால் காவிரி ’மேற்பார்வை குழு’ அமைக்க இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ற கட்டுரை மட்டும் வந்துவிட்டது. எனது முகநூலில் இதனை பகிர்ந்துவிட்டேன். பிற கட்டுரைகளில் பிரிவியூ கூட வரவில்லை. --Inbamkumar86 (பேச்சு) 15:50, 12 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Inbamkumar86&oldid=30461" இலிருந்து மீள்விக்கப்பட்டது