தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டம்பர் 5, 2009, சூடான்:


தெற்கு சூடானின் மட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி அதிகாரமிக்க பிராந்தியத்தில் இடம்பெற்ற புதிய இன வன்முறைகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெற்கு சூடான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.


தலைநகர் மலக்காலுக்கு வடக்கே, டிங்க்கா இன மக்கள் வாழும் கிராமம் ஒன்றுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் 20 பேரை சுட்டுக் கொன்றுள்ளதுடன் குடியிருப்புக்களை எரித்துவிட்டு கால்நடைகளையும் திருடிச்சென்றுள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த டிங்க்கா இன மக்கள் குழுக்கள், அருகிலுள்ள ஷில்லுக் இன மக்களின் கிராமத்தில் ஜந்து பேரைக்கொன்று பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போது தனியாகப் பிரிந்து சென்றுள்ள அரசியல் கட்சியின் தலைவருமான லாம் அக்கோல் என்பவரே ஷில்லுக் ஆயுததாரிகளுக்கு ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.


ஆனால் குறித்த அமைச்சர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

மூலம்[தொகு]