உருசியாவின் வோல்ககிராத் நகரில் பேருந்தில் குண்டுவெடிப்பு, ஆறு பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 21, 2013

உருசியாவின் தெற்கே வோல்ககிராத் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30 பெர் காயமடைந்தனர்.


வடக்கு காக்கசுப் பகுதியின் தாகெஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இசுலாமியத் தீவிரவாதப் பெண் ஒருவரே இத்தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.


பிற்பகல் 2 மணியளவில் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றது. பேருந்தில் மாணவர்கள் உட்பட சுமார் 40 பேர் வரையில், பயணம் செய்ததாகத் தெரிகிறது. வொல்ககிராத் நகரம் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தெற்கே 900 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.


உருசியாவின் கருங்கடல் நகரான சோச்சியில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருப்பதால், தீவிரவாதிகள் தமது தாக்குதல்களை அதிகரிக்கக்கூடும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வடக்கு காக்கசசு பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் உத்தரவிட்டுள்ளார்.


மூலம்[தொகு]