இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 29, 2015

இத்தோனோசியா எட்டு பேரை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியது. இதில் ஏழு பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். பன்னிரெண்டு பேர் கொண்ட துப்பாக்கி வீர்ர்கள் மரண தண்டனையை நிறைவேற்றினார்கள்.


ஆவுசுத்திரேலியாவை சேர்ந்த இருவரும் பிரேசிலை சேர்ந்த ஒருவர் நைசீரியாவைச் சேர்ந்த நால்வர் இத்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் எட்டு பேருக்கு துப்பாக்கியால் சுடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆவுசுத்திரேலியாவை சேர்ந்தவர்களின் பெயர் மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரு சென் என்று தெரியவந்துள்ளது. இருவரும் 33, 31 வயதுடையவர்கள். இவர்கள் இருவருக்கும் 2005இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் பாலி ஒன்பது எனப்படும் குழுவின் தலைவர்கள் என கருதப்படுகிறது. இவர்கள் ஆவுசுத்திரேலியாவுக்கு 18 பவுண்டு போதை பொருளை கடத்த முயன்ற போது தென்பாசர் வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.


மரண தண்டனைக்கு உள்ளானவர்கள் விபரம்; மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரு சென் இருவரும் ஆவுசுத்திரேலியாவை சேர்ந்தவர்கள், ரகீம் சலமி, சில்வர் ஒபிக்வே வோலிசே, ஓகேவுடில் ஓயாடன்சி, மார்டின் ஆண்டர்சன் ஆகிய நால்வரும் நைசீரியாவை சேர்ந்தவர்கள், சானின்அல் அபைடின் இந்தோனேசியாவை சேர்ந்தவர் ரோடிரிகோ குலார்டே பிரேசிலை சேர்ந்தவர். இறுதி நேரத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவர் சேன் வெலசோ என்ற பிலிப்பானிய பெண்.


இவர்கள் அனைவரும் போதை பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு மரணதண்டனை செவ்வாய் இரவு இந்தோனேசிய நேரம் 00.35 மணியளவில் நடு சாவாவில் உள்ள நுச கம்மாகன் தீவிலுள்ள சிறையில் நிறைவேற்றப்பட்டது.


கடந்த சனவரியில் பிரேசில் நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து பிரேசில் தனது தூதுவரை இந்தோனேசியாவில் இருந்து விலக்கிக்கொண்டது. ஆவுசுத்திரேலியாவும் தனது தூதரை விலக்கிக் கொண்டுள்ளது.


பிலிப்பைன்சுக்கும் இந்தோனேசியாவிற்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவதற்கு முன் இறுதி நேரத்தில் உடன்பாடு ஏற்பட்டதை ஒட்டி ஒன்பதாவது கைதியான பிலிப்பைன்சை சேர்ந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



மூலம்[தொகு]