சிரியாவிலிருந்து உருசிய படைகளில் பெரும் பகுதி விலகல் என உருசிய அதிபர் புதின் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 14, 2016

உருசிய அதிபர் புதின் தங்கள் நோக்கங்களை நிறைவேரியதால் சிரியாவிலிருந்து பெருமளவிலான படைகள் விலகும் என அறிவித்துள்ளார்


திங்கள் கிழமை இதை சிரிய அதிபர் ஆசாத்திடம் தொலைபேசியில் புதின் தெரிவித்தார். அறிவிக்கும் முன்பு உருசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களிடம் கிரம்லினில் புதின் பேசினார். செப்டம்பரில் சிரியா வந்த உருசிய படைகள் செவ்வாய்கிழமை முதல் விலகும் என எதிர்பார்க்கபடுகிறது.


சிரிய அதிபர் ஆசாத்தின் அரசை குலைந்து போகாமல் உருசிய படைகள் காப்பாற்றிவிட்டதாக நம்புவதாலும் செனிவாவில் நடக்க இருக்கும் அமைதிப்பேச்சுவார்த்தையை முன்னிட்டும் இந்த விலகல் அறிவிப்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது. சிரிய உள் நாட்டு போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கமுடியும் என்று புதின் கூறினார். புதினின் இந்த எதிர்பாராத முடிவை மேற்குல நாடுகள் ஐயமாக நோக்குகின்றன. புதின் இதற்கு முன்பும் இதேபோல் அறிவித்தும் எதுவும் உருசியாவினால் காப்பற்றப்படவில்லையென்ற மேற்கிலகின் அதிகாரி இந்த அறிவிப்பு என்ன வகையாகனதான இருக்கும் என பொருத்திருந்து பார்த்தே கூறமுடியும் என்றார்.


படைவிலகல் நடவடிக்கை உண்மையாக நடைபெற்றால் அது ஆசாத் தரப்புக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் என்று பேச்சுவார்த்தை குழு அதிகாரி தெரிவித்தார். அரச எதிர்ப்பு படைகளின் உள்கட்டமைப்பை சிதைக்கவும் எதிர்ப்பு படைகளை எதிர்க்கவும் சில உருசிய வான் படைகள் சிரியாவில் இருக்க ஆசாத் ஒத்துக்கொண்டதாக புதின் தெரிவித்தார் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்து ஆசாத் படைகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார்.


உருசிய படைகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படவில்லை. உருசியா கடற்கரையோர மாகாணமான லக்குவியாவின் ஆமெய்மீம் வான்படைத் தளத்தையும் தார்தூசு துறைமுகத்தையும் தொடர்ந்து பயன்படுத்த சிரியா ஒத்துக்கொண்டது.


மூலம்[தொகு]