உள்ளடக்கத்துக்குச் செல்

பார்க் கிளிர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டை கொலம்பிய வாக்காளர்கள் ஏற்கவில்லை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 3, 2016

இடது சாரி அமைப்பான பார்க் எனப்படும் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுத படை கிளிர்ச்சியாளர்களுடன் கொலம்பியா செய்து கொண்ட உடன்பாட்டை கொலம்பிய வாக்காளர்கள் ஏற்கவில்லை.


நான்கு ஆண்டுகளாக நடந்த பேச்சு வார்த்தியின் விளைவாக 2016 சனவரி மாதம் பார்க் தலைவருக்கும் கொலம்பிய அதிபருக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்படிக்கை 50% கொலம்பிய வாக்காளர்கள் ஏற்றால் மட்டுமே செயல்பாட்டுக்கு வரும்.


உடன்பாட்டுக்கு ஆதரவாக அதிபர் சான்டோசும் பல அரசியல் கட்சிகளும் இருந்தன. உடன்பாட்டுக்கு எதிராக முன்னாள் கொலம்பிய அதிபர் உரைபு இருந்தார். ஞாயிறு அன்ற நடந்த வாக்குப்பதிவில் உடன்பாட்டை ஏற்கும் அணி வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்பட்டது. வாக்குப்பதிவு மிகவும் குறைவாக இருந்தது. 30% வாக்காளர்களே வாக்களித்தனர். அதில் 50.2% வாக்காளர்கள் இந்த உடன்பாட்டை ஏற்கவில்லை. 40.8% பேர் உடன்பாட்டை ஏற்றனர். வேறுபாடு 54,000 வாக்குகள்.


இந்த அமைதி உடன்படிக்கையால் கிளர்ச்சியாளர்கள் அவர்கள் செய்த கொலைகளில் இருந்து தப்பிவிடுவர் என உடன்பாட்டை ஏற்காதவர்கள் கூறினர்.


இந்த உடன்பாட்டின் படி கிளர்ச்சி காலத்தில் நடந்த குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். குற்றங்கள் நிருபணமானால் கடும் தண்டனைக்கு பதிலாக குறைந்த அளவு தண்டனை தரப்படும்.


மேலும் ஆயதத்தை கைவிட்ட பார்க் கிளர்ச்சியாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை தரும் மேலும் வணிகம் செய்ய விரும்புபவர்களுக்கு அரசு நிதி உதவி செய்யும்.


இத்த உடன்படிக்கை 2018 முதல் 2022 வரை 10 இடங்களை நாட்டின் நாடாளுமன்றத்தில் தருவது என்றது உடன்பாட்டை ஏற்காத பலருக்கு பிடிக்கவில்லை.


உடன்பாட்டை எதிர்த்த உரைபு குற்றம் நிருபிக்கப்பட்டவர்கள் எந்த பதவிக்கும் போட்டியிடமுடியாது, பார்க் தலைவர்கள் குற்றங்களுக்கு கடும் தண்டனையை அனுபவிக்க வேண்டும், பார்க் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு தரவேண்டும், கொலம்பிய அரசியல் சாசனத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது போன்ற மாற்றங்கள் அமைதி உடன்படிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார்.


பொகொட்டாவில் உள்ள வாக்காளர்கள் இந்த உடன்பாட்டை ஏற்றனர் ஆனால் உரைபின் சொந்த மாகாணமான நாட்டின் மேற்கிலுள்ள காபி விளையும் அன்டிகுய்யா உடன்பாட்டை ஏற்கவில்லை.



மூலம்

[தொகு]