ஐக்கிய அமெரிக்கா யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 13, 2016

யுஎசுஎசு மேசன்
தாக்குதல் நடத்திய யுஎசுஎசு நிமிட்சு கப்பல்

ஐக்கிய அமெரிக்கா செங்கடலிலுள்ள தனது யுஎசுஎசு மேசன் கப்பல் மீது தாக்குதல்கள் நடந்ததை அடுத்து யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது.


ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க கப்பலை தாக்கின. கப்பல் பாதுகாப்பு முறைகளை கையாண்டதால் அதற்கு எச்சேதமும் ஏற்படவில்லை. ஏவுகணைகள் வந்த பகுதியில் இருந்த மூன்று தொலைக்கண்டுணர்விகள் அமெரிக்க யுஎசுஎசு நிமிட்சு கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட டாமஆக் சீர்வேக ஏவுகணை கொண்டு தாக்கப்பட்டன.


இந்த தொலைக்கண்டுணர்விகள் அவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்த பகுதியில் இருந்தன. அவுதி கிளர்ச்சியாளர்களின் நிலை மீது அமெரிக்கா நேரடியாக நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும்.


யெமனின் உள்நாட்டு போரில் அவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி அரேபியா தலைமையில் கூட்டுப்படைகள் வான் வழித்தாக்குதல்களை நடத்துகின்றன. அதற்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருகிறது.


அவதி கிளர்ச்சியாளர்கள் தாங்கள் அமெரிக்க கப்பலை தாக்கவில்லை என மறுத்துள்ளனர்.


மூலம்[தொகு]