சூரிய மண்டலத்திற்கு வெளியே 'வேற்றுலகத்' துணிக்கைகள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 2, 2012

எமது சூரிய மண்டலத்திற்கு சற்று வெளியே ”விண்மீனிடைப் பொருட்கள்” அல்லது “வேற்றுலகப் பொருட்களை” நாசாவின் ஐபெக்சு (IBEX) விண்கலம் முதற் தடவையாகக் கண்டுபிடித்துள்ளது.


நாசாவின் ஐபெக்சு விண்கலம்

இந்தப் பொருட்கள் விண்மீன்கள், கோள் மற்றும் உயிரினத்தால் அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இது தொடர்பில் ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும். எமது சூரியமண்டலத்திற்குள் உள்ள பொருட்களை விட இவை பெரிது வேறுபட்டுள்ளதாக நாசாவின் அறிவியலாளர் டேவிட் மெக்கோமசு கூறினார். "நெயோனுடன் ஒப்பிடும் பொழுது இவற்றில் ஒக்சிசன் குறைவாக உள்ளது."


ஐபெக்ஸ் விண்கலம் 2008ஆம் ஆண்டு சூரிய மண்டலத்திற்கும் அண்டவெளிக்கும் உள்ள எல்லையை வரைபடமாக உருவாக்கும் முயற்சியாக நாசாவினால் அனுப்பப்பட்டது. இதன் மூலம் விண்வெளியில் பல முக்கியமான ஆய்வுகளை நாசா மேற்கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் சூரியக் காற்று பூமியின் காந்தக்கோளத்தில் மோதுவதை இது படம் பிடித்ததன் மூலம் சூரியனில் இருந்து மணிக்கு மில்லியன் மைல்கள் வேகத்தில் செல்லும் மர்மமான மின்னூட்டத் துகள்களைக் கண்டுபிடித்தது.


மூலம்[தொகு]