இந்திய நாடாளுமன்றம் 60 ஆண்டுகளை நிறைவு செய்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 13, 2012

உலகின் மிகப்பெரிய குடியரசு எனப்படும் இந்தியாவின் நாடாளுமன்றம் ஆரம்பமாகி இன்றோடு 60 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதைக் கொண்டாட இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.


இந்தியாவில் 1951-52களில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது, பிறகு ஏப்ரல் 13, 1952 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இன்றுடன் இந்திய நாடாளுமன்றம் ஆரம்பாமாகி 60 ஆண்டுகள் நிறைவாகிறது.


இன்று நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தை மக்களவையில் பிரணாப் முகர்ஜியும், மாநிலங்கவையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் துவக்கிவைத்தனர். இன்றைய கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்,உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் ஆகியோர் உரையாற்றினர். இன்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் முதல் மக்களவையின் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


மூலம்[தொகு]