உகாண்டா மன்னர்களின் கல்லறைகள் தீக்கிரையாகின

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 17, 2010


உகாண்டா மன்னர்களின் கல்லறைகள் தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து அங்கு ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் வெடித்துள்ளன. இது விசமிகளின் செயல் எனக் கருதப்படுகிறது.


கலவரங்களை அடக்க தலைநகர் கம்பாலாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு தீ எப்படிப் பரவியது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.


யுனெஸ்கோவினால் பட்டியலிடப்பட்டுள்ள இந்தக் கல்லறைகள் புகாண்டா இராச்சியத்தைச் சேர்ந்த மன்னர்கள் நால்வரின் கல்லறைகள் இங்கு உள்ளன. இவை 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை.


தற்போதைய புகாண்டா அரசரின் ஆதரவாளர்கள் தமது சுயாட்சியைக் குறைக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிராக சென்ற ஆண்டு இங்கு கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர்.


அழிந்த நினைவுச் சின்னங்கள் அருகே மக்கள் கவலையுடன் காணப்படுகிறார்கள் என பிபிசி செய்தியாளர் ஜோசுவா முமாலி தெரிவித்தார்.


உகாண்டாவின் நான்கு பண்டைய இராச்சியங்களில் புகாண்டா மிகப்பெரியதாகும்.

மூலம்[தொகு]