உலகின் உயரமான பாலம் மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 6, 2012

உலகின் மிகவும் உயரமான பாலத்தை மெக்சிக்கோவில் அந்நாட்டின் அரசுத்தலைவர் ஃபிலிப்பே கால்டரன் திறந்து வைத்தார். 403 மீட்டர் (1,322 அடி) உயரமான இந்த வடங்கள் தாங்கு பாலம் பலுவார்ட் பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வடக்கு மெக்சிக்கோவில் சியேரா மாட்ரே மலை இடுக்குகளில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


பலுவார்ட் பாலம்

"வடக்கு மெக்சிக்கோ மக்களை முன்னெப்போதும் இல்லாதவாறு இப்பாலம் இணைக்கிறது," என அரசுத்தலைவர் கால்டெரன் தெரிவித்தார்.


1,124மீ (3,687அடி) நீளப் பாலம் எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோ விடுதலை பெற்று 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்க நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


இவ்வாண்டு இறுதியில் இப்பாலம் பொது மக்களுக்காகத் திறந்துவிடப்படும். பசாட்லான் மற்றும் டுராங்கோ ஆகிய நகரங்களுக்கிடையேயான பயண நேரம் இதன் மூலம் 6 மணித்தியாலங்களால் குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மெக்சிக்கோவில் சுற்றுலாத்துறை, மற்றும் வணிகம் ஆகியன மேம்படும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். ஆனாலும் இப்புதிய வழி மூலம் போதைப் பொருட்கள் கடத்துவோரின் தொகை அதிகரிக்கும் என விமரிசகர்கள் கருதுகின்றனர்.


உலகின் மிக உயரமான வடங்கள் தாங்கு பாலமான பலுவார்ட் பாலம் பிரான்சின் மில்லோ பாலத்தின் உயரத்தை மிஞ்சியுள்ளது.


மூலம்[தொகு]