உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. ஆர். ரகுமானுக்கு இரண்டு கிராமி விருதுகள்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 1, 2010


ஐக்கிய அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஞாயிறன்று நடந்த 52-வது கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் மொசார்ட் என அழைக்கப்படும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகள் கிடைத்தன.


ஏ. ஆர். ரகுமான்

சென்ற ஆண்டில் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற சிலம்டாக் மில்லியனியர் படத்தின் சவுண்ட் ட்ராக் மற்றும் ஜெய் ஹோ பாடல் ஆகியவற்றுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.


விருதுகளைப் பெற்றுக்கொண்டு ரகுமான் பேசும்போது, "ஆண்டவர் மிகப்பெரியவர். அவருக்கு நன்றி" என்றார்.


சென்ற மாதம், Couples Retreat என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற ரகுமானின் நானா என்ற தமிழ்ப் பாடல் ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் மேலும் 62 பாடல்களுடன் ஆஸ்கார் விருதுக்காகப் போட்டியிடுகிறது.


இந்த கிராமி விருதுகள் ரகுமானின் திறமைக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடத்துள்ளது என பிபிசியின் தில்லி செய்தியாளர் சௌத்திக் பிஸ்வாஸ் தெரிவித்தார்.


ரவிசங்கர், சாகிர் உசைன், விஷ்வமோகன் பட் ஆகிய இந்தியர்கள் இதற்கு முன்பு கிராம்மி விருதுகளைப் பெற்றிருக்கின்றனர்.

மூலம்