தூத்துக்குடி அனல்மின் நிலைய முதல் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 10, 2014


தமிழ்நாடு தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல்மின் நிலையத்தில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மிக விரைவில் இங்கு மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ் நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள தூத்துக்குடி நகரின் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் 2001- 2002 காலப்பகுதியில் என்.டி.பி.எல். என்ற கூட்டு நிறுவனத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது. இதற்கான செலவுகள் ரூ.4,910 கோடிகள் ஆகும் என முடிவு செய்யப்பட்டது.


இந்த நிறுவனத்திற்காக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து நேரடியாக கன்வேயர் மூலம் நிலக்கரி கொண்டுவரப்படுகிறது. இந்த வேலைகள் தற்சமயம் முழுவதும் முடிந்ததால் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக இயக்கப்பட்டது.


இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகம் - 387 மெகாவாட், கர்நாடகம் - 157.9 மெகாவாட், புதுச்சேரி - 9.5 மெகாவாட், கேரளம் - 72.5 மெகாவாட், மற்றும் ஆந்திரம் - 254.6 மெகாவாட் என பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]