உள்ளடக்கத்துக்குச் செல்

நுகர் மின்னணுக் கருவிகளுக்கு சாதாரண நீரைப் பயன்படுத்தி ஆற்றலூட்டும் மின்கலம் தயாரிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(நுகர் மின்னணுக்கருவிகளுக்கு நீர் ஆற்றலூட்டும் மின்கலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெள்ளி, ஏப்பிரல் 19, 2013

மின்கலங்களினால் இயங்கும் தயாரிப்புகளுக்கு சாதாரண நீரைப் பயன்படுத்தி 3 வாட் வரை ஆற்றலைத் தரக்கூடிய எரிபொருள் மின்கலம் ஒன்று வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.


இது நுண்ணிய எரிபொருள் மின்கல தொழினுட்பத்தை சார்ந்ததாகும். இதன் பெயர் மைஎஃப்சி பவர்ட்ரெக் (MyFC PowerTrekk) என இதனை உருவாக்கிய சுவீடன், சுடாக்கோமில் உள்ள கேடிஎச் ராயல் தொழில்நுட்பக் கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கழகத்தின் ஆய்வாளரும், மைஎஃப்சியின் இயக்குனருமான ஆப்டெர்சு லூடுபிளாடு மடிக்கணினிகளுக்கு எரிபொருள் மின்கலம் அமைப்பதற்கான முதல் படி இதுவே எனக் கூறினார்.


குமுகாயத்தில் எரிபொருள் மின்கலங்களை பயன்படுத்த இந்த மின்தேக்கி முக்கிய பங்காற்றும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


நாம் நீரினை ஒரு சிறிய நீக்கக்கூடிய மாழை வட்டுக்குள் ஊற்றினால், அதிலுள்ள நீர்மமானது வெளியாகி, உயிர்வாயுவுடன் இணைந்து மின்சாரத்தை உண்டாக்குகிறது. இதன் முடிவான மின் ஊட்டம் ஆப்பிள் ஐபோனின் மின்தேக்க திறனில் 25 முதல் 100 விழுக்காடு வரை மின்சாரத்தை ஊட்டுகிறது. இது கையடக்க கருவிகளாகவும் கூட பயன்படுத்தலாம்.


மைஎஃப்சி என்பது ஒரு மலிவுவிலை மின்கலங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இது கைப்பேசி மற்றும் மடிக்கணினிகளுக்கு கையடைக்கமான கருவிகளை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்

[தொகு]