பூமி-கோள் மோதுகையாலேயே நிலவு தோன்றியது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது
- 17 பெப்பிரவரி 2025: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 17 பெப்பிரவரி 2025: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 17 பெப்பிரவரி 2025: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 17 பெப்பிரவரி 2025: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 17 பெப்பிரவரி 2025: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது

ஞாயிறு, சூன் 8, 2014
பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியுடன் கோள் ஒன்று மோதியதாலேயே நமது சந்திரன் தோன்றியதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அப்பல்லோ விண்வெளி வீரர்களினால் கொண்டுவரப்பட்ட சந்திரனின் பாறை ஒன்றிலேயே தீயா என்ற கோளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்பின் மூலம் இப்படியான மோதுகையின் மூலம் சந்திரன் தோன்றியது என்று முன்னர் கூறப்பட்ட கோட்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாய்வுக் கட்டுரை சயன்சு என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கும் தீயா (Theia) என்ற கோளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் பற்றிய கோட்பாடு 1980களில் கூறப்பட்டிருந்தது. இம்மோதுகையால் சிதறிய துண்டுகளில் ஒன்றே சந்திரனாக பூமியை வலம் வருவதாக நம்பப்படுகிறது. சந்திரனின் பாறையை நன்கு ஆராய்ந்ததில், அதில் இவ்வாறான வேற்று விண்வெளிப் பொருளின் எச்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- Traces of another world found on the Moon, பிபிசி, சூன் 5, 2014
- Moon was formed after Earth was hit by planet-sized body, Theia, எக்கொனொமிக் டைம்சு, சூன் 6, 2014