பேச்சு:வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

நான் சிறுவனாக இருந்தபோது... இலங்கை வானொலியில் மாலை 4 மணியளவில் 'விளையாட்டரங்கம்' ஒலிபரப்புவார்கள்; அப்போது நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரு இசையை ஒலிக்கவிடுவர். மிகுந்த துள்ளலுடன் இருக்கும் அவ்விசைக்குச் சொந்தக்காரர் 'லால்குடி ஜெயராமன்' அவர்கள் என்பது 15 வருடங்கள் கழித்தே தெரியவந்தது. அவரின் இசையை நேரில் கேட்டதில்லை; ஆனால், கடந்த 5 வருடங்களில் மின்னணுக் கருவிகள் வாயிலாக ஏராளமாக கேட்டுள்ளேன். இன்றிரவு முழுதும் அவரின் இசையினைக் கேட்டபடியே செய்தித் தொகுப்பினை எழுதினேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:11, 22 ஏப்ரல் 2013 (UTC)[பதில் அளி]

ஆமாம் நானும் கேட்டிருக்கிறேன். எனக்கும் பின்னர் தான் தெரிந்தது லால்குடியின் இசை என்று. நினைவூட்டியமைக்கு நன்றி. அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.--Kanags \பேச்சு 21:16, 22 ஏப்ரல் 2013 (UTC)[பதில் அளி]