முதுபெரும் இந்தி நடிகர் பிரானுக்கு பால்கே விருது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, ஏப்ரல் 13, 2013

இந்தியத் திரைப்படத்துறையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது முதுபெரும் இந்தி நடிகரான பிரானுக்கு 2012ஆம் ஆண்டிற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது தங்கத்தாமரை பதக்கத்துடன் பத்து இலட்ச ரூபாய்கள் பரிசும் கொண்டதாகும். மே 3, 2013இல் இந்த விருது வழங்கப்பட உள்ளது. 2001ஆம் ஆண்டில் இவருக்கு பத்மபூசன் விருது வழங்கப்பட்டுள்ளது.


90வது அகவையில் நடிகர் பிரான்

93 அகவைகள் நிரம்பிய பிரான் 1920கள் முதல் 1990கள் வரை இந்தித் திரைப்படங்களில் பல எதிர்மறை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். "மதுமதி', "ஜித்தி', "ராம் அவுர் ஷ்யாம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது எதிர்மறை வேடத்தால் மக்களின் வெறுப்புணர்ச்சிக்கு ஆளானவர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg