உள்ளடக்கத்துக்குச் செல்

கினி மீது ஆயுதத்தடை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 17, 2009


மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியின் இராணுவ ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடுமைகளைக் கண்டித்து அந்நாட்டின் மீது ஆயுதத்தடையை விதிப்பதற்கு எக்கோவாஸ் (Ecowas) என்ற மேற்கு ஆபிரிக்க பிராந்திய அமைப்பின் உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.


கினி படையினர் எதிர்க்கட்சிப் பேரணி மீது கடந்த மாதம் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து நைஜீரியாவில் இடம்பெற்ற எக்கோவாஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


157 பொதுமக்கள் இதில் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டின. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைவிட குறைவானது என்று கினி அரசாங்கம் கூறுகிறது.


பெண்கள் பலர் பாலியல் வன்முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இக்கொலைகளுக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மூலம்

[தொகு]
"https://ta.wikinews.org/wiki/கினி_மீது_ஆயுதத்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது