வடக்கு சுமத்திரா தீவில் கடுமையான நிலநடுக்கம்
- 3 மார்ச்சு 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
- 14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
- 28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது
புதன், சனவரி 11, 2012
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவில் இன்று அதிகாலை 2.37 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலி்ல் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியதாகவும், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.
நிலநடுக்கம் பான்டாஏக் மாகாணத்திலிருந்து 420 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் உணரப்பட்டதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பான்டாஏக் மக்கள் பீதியில் வீடுகளிலிருந்து அவசரமாக வெளியேறினர். சேதங்களை பற்றிய தகவல் இதுவரை ஏதும் தெரியவில்லை.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்திய பெருங்கடலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைப்போன்று இன்று ஏற்ப்பட்ட நிலநடுக்கம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .
மூலம்
[தொகு]- Magnitude 7.3 earthquake rocks Indonesian coast, எரால்ட்சன், சனவரி 11, 2012
- Powerful earthquake hits off western Indonesia, நியூஸ்டே, சனவரி 11, 2012
- இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், தினமலர், சனவரி 11, 2012