உள்ளடக்கத்துக்குச் செல்

ஐவரி கோஸ்டில் இரசாயனக் கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டம்பர் 20, 2009, ஐவரி கோஸ்ட்:


மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் (கோட் டிவார்) மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட இரசாயனங்களால் சுகவீனமுற்றதாக கூறும் முப்பத்தோராயிரம் பேருக்கு நட்டஈடு வழங்க பன்னாட்டு சரக்கு வணிக நிறுவனமான ரபிகுரா ஒப்புக்கொண்டுள்ளது.


பாதிக்கப்பாட்டவர்கள் ஒவ்வொருவரும் தலா சுமார் 1546 டாலர்களை பெறுவார்கள். 2007 ஆம் ஆண்டில் ஐவரிகோஸ்ட் அரசாங்கத்துக்கு அந்த நிறுவனம் வழங்கிய சுமார் 200 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக இந்தத் தொகை வழங்கப்படும்.


அந்தப் பணத்தில் ஒரு பாதி, இந்தக் கழிவுகளால் உயிரிழந்ததாக கூறப்படும் 16 உள்ளூரவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.


ரபிகுரா நிறுவனத்துடன் சேர்ந்து வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், நட்ட ஈடு கோரியோரின் சட்டத்தரணிகள், அந்த கழிவுகளுக்கும், மரணங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றும், அந்த புதைக்கப்பட்ட கழிவுகள் காய்ச்சலை போன்ற சமிக்ஞைகளை ஏற்படுத்தியது என்றுகூட காண்பிக்க முடியவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.


இந்த நட்ட ஈட்டுக் கொடுப்பனவு, இந்த விவகாரத்தில் இருந்து முற்றாக ரபிகுரா நிறுவனத்தை குற்றமற்றதாக ஆக்குகிறது என்று அந்த நிறுவனத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]