கராச்சியில் சரக்கு விமானம் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 28, 2010

பாகித்தானில் கராச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சூடான் தலைநகர் கார்ட்டூமை நோக்கி நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட இவ்விமானம் ஒரு உருசியத் தயாரிப்பாகும். இதன் விமானிகளும் உருசியர்களே. விமானநிலையத்துக்கு அருகேயுள்ள கடற்படைத்தளம் ஒன்றின் மீதே இவ்விமானம் வீழ்ந்துள்ளது. இத்தளம் புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. கடற்படைத்தளம் தீப்பற்றி எரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்த இரு கட்டடத்தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


இன்று அதிகாலை 0145 மணிக்குப் புறப்பட்ட விமானம் புறப்பட்டு ஒன்றரை நிமிட நேரத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது. இவ்விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, எனினும் இயந்திரக் கோளாறாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]