உள்ளடக்கத்துக்குச் செல்

உலகின் மிக நீள தொலைக்காட்சி நெடுந்தொடர் முடிவுக்கு வந்தது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 19, 2009, ஐக்கிய அமெரிக்கா:


உலகிலேயே மிக நீளமான தொலைக்காட்சித் தொடரான 'கைடிங் லைட்' (Guiding Light) எனும் அமெரிக்க நெடுந்தொடர் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முடிவுக்கு வருகிறது.


1937ஆம் ஆண்டு என்.பி.சி. வானொலியில் தினந்தோறும் 15 நிமிடங்கள் என்று ஆரம்பித்த இத்தொடர் மக்களின் பேராதரவுடன் 1952ஆம் வருடம் தொலைக்காட்சித் தொடராக உருமாற்றம் பெற்றிருந்தது.


ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கற்பனையான நகரத்தில் நடக்கும் காதல், கல்யாணம், கள்ளக் காதல், விவாகரத்து, அவ்வப்போதைய மர்மக் கொலை என்பதாக இந்த தொடர் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றது. இத்தொடரின் மூலம் கெவின் பேக்கன், கலிஸ்டா புளொக்கார்ட், ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் போன்ற பல நடிகர்கள் நடிக்க ஆரம்பித்துப் பின்னர் புகழ் பெற்றிருந்தனர். இதன் கடைசிப் பகுதி செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமை காண்பிக்கப்பட்டது.


ஆனால் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெருகிவிட்ட தற்போதைய சூழலில் இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவந்தது.

மூலம்

[தொகு]