உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானின் பெண்கள் பள்ளி ஒன்றுக்குள் புகுந்த நபர்கள் மாணவியர் ஆசிரியைகளைத் தாக்கினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 10, 2011

பாக்கித்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 60 நபர்கள் மாணவியர் மற்றும் ஆசிரியைகளை இரும்புக் கம்பியால் அடித்துத் தாக்கியுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.


கடந்த சனிக்கிழமை அன்று முகமூடி அணிந்த நபர்கள் கைகளில் இரும்புக் கம்பிகளுடன் பெண்கள் பள்ளிக்குள் நுழைந்து மாணவியரும், ஆசிரியைகளும் ஆடம்பரமாக பொருத்தமில்லாத உடையணிந்து வருவதாக குற்றம்சாட்டி, அவர்களை இரும்புக் கம்பிகளால் அடித்துத் தாக்கியுள்ளனர். அடக்க ஒடுக்கமாக ஆடை அணிந்து வர வேண்டும், அனைவரும் தலையில் அணியும் ஹிஜாப் அணிந்து வர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.


இச்சம்பவத்தை அடுத்து நகரில் மக்கள் மத்தியில் அச்சம் பரவியது. பல பள்ளிகள் மூடப்பட்டன. அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


மூலம்

[தொகு]