இந்தோனேசியாவில் பாலம் உடைந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 28, 2011

இந்தோனேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். 30 இற்கும் அதிகமானோரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


குட்டாய் கர்த்தனேகரா பாலம்

போர்னியோத் தீவின் இந்தோனேசியப் பகுதியில் இருக்கும் கிழக்குக் களிமந்தான் என்ற இடத்தில் சனிக்கிழமை அன்று இவ்விபத்து ஏற்பட்டது.


சான் பிரான்னிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே இது இடிந்து வீழ்ந்துள்ளது. பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனக்கள் கீழே ஓடும் மகாக்கம் ஆற்றில் வீழ்ந்தன. பலர் மூழ்கிய வாகனங்களில் சிக்குண்டனர்.


"எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது சரியாகக் கணக்கிட முடியவில்லை," என தேசிய அனர்த்த முகாமைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 39 பேர் காயமடைந்தனர் என அவர் கூறினார். இவ்விபத்துக் குறித்து இந்தோனேசிய அதிபர் சுசிலோ யுதயோனோ உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


720 மீட்டர் நீளமான இப்பாலம் 2002 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. போர்னியோவில் உள்ள மிக நீளமான தொங்கு பாலம் இதுவாகும்.


மூலம்[தொகு]